• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

அண்ணாமலை மீது முதல்வர் ஸ்டாலின் வழக்கு..!

ByA.Tamilselvan

May 10, 2023

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது முதலமைச்சர் ஸ்டாலின் தரப்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி திமுக சொத்து பட்டியல் என்ற பெயரில் எந்த ஆதாரமும் இன்றி அவதூறு தவறுகளை வெளியிட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர குற்றவியல் வழக்கறிஞர் தேவராஜன் முதலமைச்சர் சார்பில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் முதலமைச்சரின் பெயருக்கும், நற்பெயருக்கும் களங்கம் விளைவிப்பதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். தற்போது தமிழகத்தில் நல்லாட்சி நடத்தி வரும் முதல்வருக்கு எதிராக எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் இந்த குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் இந்த மனு 8 வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் மனு விசாரணைக்கு வரும் நிலையில் அண்ணாமலை தரப்பில் வாதங்கள் எடுத்து வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது