மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா நிலையூர் ஓம் சக்தி நகர் பகுதியைச் சேர்ந்த சித்தன்- ஈஸ்வரி தம்பதியினரின் மகள் அமுலு (வயது 6)சிறுமி அமுலு இன்று காலை சிறுவர்களுடன் அருகிலுள்ள பானங்குளம் கண்மாயில் குளித்துக் கொண்டிருந்தபோது சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்தார்.எனவே இது குறித்து உடன் விளையாடிய சிறுமிகள் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர் அப்பகுதி மக்கள் திருப்பரங்குன்றம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தது சம்பவத்துக்கு விரைந்த நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையில் ஆன தீயணைப்பு மீட்புக் குழுவினர் சிறுமியை மீட்டனர். ஆனால் பரிதாபமாக சிறுமி அமுலு உயிரிழந்தார்..
சம்பவ இடத்துக்கு விரைந்த திருப்பரங்குன்றம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து திருப்பரங்குன்றம் போலீசார் சிறுமி நீரில் மூழ்கி இறந்தது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.