• Thu. Oct 15th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

கொட்டிதீர்க்கும் மழை.. கோரிக்கையை தீர்க்குமா அரசு?..

By

Aug 21, 2021

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்
இன்று அதிகாலை முதலே இடியுடன் கூடிய கனமழை 2 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்தது. இதனால் சேலம் – சங்ககிரி செல்லும் பிரதான சாலைகளில் மழை நீர் தேங்கி வெள்ளம் போல திரண்டு சாக்கடை நீருடன் கலந்து கரைபுரண்டு ஓடியது.

இதனிடையே காலை 8 மணிக்கு மேல் மழை சற்று குறைந்ததால் வெள்ளம் வடிய தொடங்கியது. இருப்பினும் மழை நீருடன் சாக்கடை நீர் கலந்து சாலையோரங்களில் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

வாகன ஓட்டிகள் பள்ளம் தெரியாமல் கீழே விழுந்து உயிரிழப்பு ஏற்படுவதாகவும்,
மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாக்கடைகளை கான்கிரீட் போட்டு மூட வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.