சிவாலய பூஜையில் சிவாச்சாரியார்களுக்கு தேவையில்லாத இடையூறுகள் ஏற்படுத்துவது மனவேதனையை தருவதாக பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் ஆதி சிவாச்சாரியர்களுக்கு ஏற்பட்டிருக்கும் இன்னல்கள் , வாழ்வாதார பிரச்சனைகள் நீங்கி, நினைத்த காரியம் கைகூட கற்பக விநாயகரிடம் அதர்மசீரிச மந்திர பாராயணம் பாடி 80க்கும் மேற்பட்டோர் பிராத்தனையில் ஈடுபட்டனர்.
அதன்பின்னர், செய்தியாளர்களை சந்தித்த பிச்சை குருக்கள் பரம்பரை பரம்பரையாக பல நூற்றாண்டு காலமாக பூஜைகள் செய்து வருவதாகவும் ,தற்போது அவர்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளாகவும் கூறினர். பல்வேறு சமூகத்தினரும் ஆதரவு தந்து கொண்டுள்ளதை அறியாமல் சிலர் ஈடுபட்டு கொண்டிருப்பது மனவருத்தத்தை அளிக ப்பதாகவும், தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.