

குவைத் இலங்கை தூதரகத்தில் தமிழர்களின் பண்பாடு,கலாச்சாரத்தோடு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது….
உலகம் முழுவதும் கனடா,இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் வாழும் தமிழர்கள் பொங்கல் விழாவை தமிழர்கள் கலாச்சாரத்தோடு கொண்டாடுகிறார்கள்.இந்த நிலையில் ஜனவரி 27 ஆம் தேதி குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இலங்கை தூதுவர் காந்திபன் பாலசுப்ரமணியன் தலைமையிலும் இலங்கை தமிழ் அமைப்பு தலைவர் மகேஷ் ராஜா முன்னிலையிலும்இவ்விழா நடைபெற்றது .

இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ் அமைப்புகளைச் சார்ந்த ஸ்டீபன் இனிக்கும்,தமிழ் ரபீக் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.இந்நிகழ்ச்சியில் பொங்கல் விழா மற்றும் தமிழர்களின் கலாச்சார விளையாட்டுகள்,பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. துணை தூதுவர் அலிம் மற்றும் ஏராளமான குவைத் வாழ் தமிழர்கள் கலந்து கொண்டு பொங்கல் விழாவை கொண்டாடினர்.மேலும் வருகை தந்த அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழ் கலாச்சார உணவான வாழை இலை உணவு வழங்கப்பட்டது.

