

உ..பியில் மோசமான உணவு வழங்கப்படுவதை நடுரோட்டில் கதறி அழுத படியே முறையிடும் போலிஸ்காரரின் வீடியோ இந்தியா முழுவதும் வைரலாகிவருகிறது.

உ..பியில் காவலர்களுக்கான உணவகத்தில் மோசமான உணவு வழங்கப்படுவதை கண்ணீருடன் முறையிட்ட காவலரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.பெரோசோபாத் காவலராக பணியாற்றி வரும் மனோஜ்குமார் 12 மணி நேர வேலை முடிந்து வரும் காவலர்களுக்கு இந்த உணவுதான் தரப்படுகிறது. என காய்ந்த ரொட்டிகளை காண்பித்து கதறி அழுகிறார். இது குறித்து பலமுறை புகாரளித்தும் தரமான உணவு வழங்கப்படவில்லை என்றும் வேதனையுடன் கூறுகிறார்.