முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான வழக்குகளுக்கு தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்குகளில் கடும் நடவடிக்கை எடுக்க தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.மேலும் இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெறலாம் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆர்.எஸ். பாரதி, அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி எஸ்.பி வேலுமணி தொடர்ந்த இந்த வழக்கின் விசாரணையை வரும் 25 ம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.