மதுரை கோட்ட ரயில் இயக்கத்துறையில் பணிபுரியும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு பாராட்டுவிழா நடைபெற்றது.
75வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ரயில்வே துறையில் பணியாற்றும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. மதுரை கோட்ட ரயில் இயக்கத்துறையில் முன்னாள் ராணுவ வீரர்கள் பலர் பணியாற்றுகின்றனர். அவர்களில் இரு ரயில் நிலைய அதிகாரிகள், ஒரு ரயில் மேலாளர், ஒரு ஆவண காப்பாளர், 16 பாயிண்ட்ஸ் மேன் ஆகியோர் ராணுவ சீருடையில் அணிவகுப்பு நடத்தினர்.
கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் முன்னாள் ராணுவ வீரர்களின் சேவைகளை பாராட்டி பதக்கம் வழங்கி கௌரவித்தார். விழாவில் முதுநிலை கோட்ட ரயில் இயக்க மேலாளர் ராஜேஷ் சந்திரன், கோட்ட ரயில் இயக்க மேலாளர் சபரிஸ் குமார், மஸ்தூர் யூனியன் கோட்டச் செயலாளர் ரபீக் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர்.