தமிழர்களின் வீர விளையாட்டான பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டு
போட்டி குறித்து சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ. பேசிய சர்ச்சைக்குரிய கருத்தைக் கண்டித்தும், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்காத தமிழக அரசைக் கண்டித்தும் அலங்காநல்லூர் வாடிவாசல் அருகில் ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட அதிமுக சார்பில் இன்று காலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னாள் அமைச்சர்களும், மாவட்ட செயலாளர்களுமான ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, ராஜன் செல்லப்பா ஆகியோர் தலைமையேற்று ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், கானை வளர்ப்பவர்கள் தங்களது காளைகளை கொண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
இதில், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம், மகேந்திரன், சரவணன், ஒன்றிய செயலாளர்கள் கல்லனை ரவிச்சந்திரன், வாடிப்பட்டி காளிதாஸ், மலையாளம், சி பி ஆர் மணி மகேந்திர பாண்டி நகர செயலாளர்கள் அழகராஜ், குமார், அசோக்குமார், அம்மா பேரவை மாவட்ட துணை செயலாளர்கள் ஜெயச்சந்திரமணியன், முத்துக்
கிருஷ்ணன், வாவிடமருதூர் ஆர்.பி.குமார், மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் மனோகரன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் சோழவந்தான் சிவா மகளிர் அணி லட்சுமி சாந்தி மாரிமுத்து மன்னாடிமங்கலம் ராஜபாண்டி கல்லாங்காடு ராமு குருவித்துறை காசிநாதன் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், மகளிர் அணியினர், இளைஞர்கள், காளைகளை வளர்ப்போர் உள்ளிட்ட சுமார் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.




