மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து எம்ஜிஆர் பேருந்து நிலையம் செல்லக்கூடிய அரசு பேருந்து டிஎன் 58 என் 27 70 என்கின்ற பேருந்தானது தல்லாகுளம் அவுட் போஸ்ட் பேருந்து நிறுத்தத்திற்கு வந்து கொண்டிருந்தது.

அப்பொழுது பஸ் பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாமல் சுமார் 20 அடி தூரம் பேருந்தை தள்ளி சாலையில் நிறுத்தி மாணவர் மாணவிகள் ஓடி வரச் செய்து பின் ஏறுவதற்குள் பேருந்துக்குள் ஏறுவதற்குள் தானியங்கி கதவை ஓட்டுநர் மூடவே பாதி கை உள்ளேயும் பாதி வெளியேயும் இருக்கும் நிலையை வாகனத்தை ஓட்டினார். இதில் பாதி மாணவிகள் பேருந்தில் ஏற முடியாமல் பின்னே பேருந்து நிறுத்தத்திற்கு சென்றனர்.

இது போன்ற அலட்சிய போக்குடன் செயல்படும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுக்கின்றனர். மாணவர்களின் உயிர் இவர்களுக்கு துச்சமாக தெரிகிறது என பேருந்து நிறுத்தத்தில் நின்ற பொதுமக்கள் ஓட்டுநரை கடிந்து கொண்டனர். போக்குவரத்து நிர்வாகம் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமா?




