புதுக்கோட்டை மாவட்டம் டாக்டர் கண் அகர்வால் மருத்துவமனை சார்பாக இன்று உலக கண்தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் மற்றும் கே கே சி கல்லூரி ஆசிரியர் சுதர்சன் கல்லூரி ஆசிரியர் டாக்டர் அகர்வால் கண் ஐ கேர் மண்டல தலைமை மருத்துவர் சாந்தி அகர்வால் கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

இப்பேரணி ஆனது புதுக்கோட்டை அண்ணா சிலை இருந்து கீழ ராஜவீதி வழியாக பிருந்தாவனம் டாக்டர் அகர்வால் ஐ மருத்துவமனை சென்றடைந்தது. இப்பேரணியில் கண் தானம் பற்றி விழிப்புணர்வு பதாகை ஏந்தி கொண்டு கல்லூரி மாணவ மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்தானத்தை பற்றி பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர்.





