கடவுளுக்கு,
காணிக்கை.
குருவிற்கு
தட்சணை.
காதலனுக்கு
முத்தம்.
கணவனுக்கு
வரதட்சணை.
மனைவிக்கு
சம்பாத்தியம்.
பிள்ளைகளுக்கு
ஆஸ்தி.
பெற்றோர்க்கு
அடைக்கலம்.
உறவினர்க்கு
உபசரிப்பு
தோழனுக்கு
தோழ் கொடுப்பது.
இப்படி
ஏதாவது ஒன்றைக் கொடுத்துத்தான்
அன்பை
நிருபீத்துக் கொள்ள வேண்டியிருக்கு.
க.பாண்டிச்செல்வி