• Wed. Apr 24th, 2024

தமிழகத்தில் பிளஸ்2 தேர்வு நாளை தொடங்குகிறது -. தேர்வு அறையில் ஆசிரியர்களும் செல்போன் வைத்திருக்க தடை .

ByA.Tamilselvan

May 4, 2022

தமிழகத்தில் பிளஸ்2 தேர்வு நாளை தொடங்குகிறது: கேள்வித்தாள் பாதுகாப்பு மையங்களுக்கு ; 24 மணிநேரம் கண்காணிக்க சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்ப்படுள்ளது .மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்களும் தேர்வுமையங்கங்களில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 பொதுத் தேர்வு தமிழகம், புதுச்சேரியில் நாளை தொடங்குகிறது. இந்த தேர்வில் 8 லட்சத்து 37 ஆயிரம் மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர். கேள்வித்தாள் காப்பு மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு 24 மணி நேரம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சிசிடிவி கேமராவும் பொருத்தப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கான பொதுத் தேர்வு நாளை தொடங்குகிறது. இந்த தேர்வில் தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 8 லட்சத்து 37 ஆயிரத்து 311 மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர். இவர்களில் பள்ளி மாணவர்கள் மட்டும் 8 லட்சத்து 22 ஆயிரத்து 684 பேர். மாணவர்கள் 39134, மாணவியர் 431341 பேர்.
புதுச்சேரியில் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 14,627. அவர்களில் மாணவர்கள் 6972, மாணவியர் 7655 பேர். இவர்கள் தவிர தனித் தேர்வர்கள் 28,353 பேர் எழுதுகின்றனர். அவர்களில் 3ம் பாலினத்தவர் 6 பேர் அடங்குவர். பிளஸ் 2 தேர்வில் மாற்றுத் திறனாளிகள் 3,638 பேர் பங்கேற்கின்றனர். சிறைவாசிகள் 73 பேர் எழுதுகின்றனர். தமிழக பள்ளி மாணவர்களுக்கு 3081 தேர்வு மையங்களும், புதுச்சேரி மாணவர்களுக்கு 38 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தனித்தேர்வர்களுக்கு 134, சிறைவாசிகளுக்காக 9 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்வு அறைக் கண்காணிப்பாளர்களாக 44 ஆயிரத்து 985 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். 3050 பறக்கும் படையினர், நிலையான படை உறுப்பினர்கள் 1241 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். கேள்வித்தாள் கட்டுக்காப்பு மையங்கள் 279 அமைக்கப்பட்டு அங்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பும், சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், காப்பு மையங்களுக்கு வந்து செல்லும் நபர்கள் குறித்த விவரங்களை பதிவு செய்ய பதிவேடுகள் முறை பின்பற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களுக்காக 167 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, அவற்றில் 46 ஆயிரத்து 785 மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர்.
சிறைவாசிகளுக்காக வேலூர், கடலூர், சேலம், கோவை, மதுரை, புதுக்கோட்டை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் சிறைகளில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிளஸ் 2 தேர்வில் 3638 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர். பிளஸ் 2 தேர்வு அதை தொடர்ந்து நடக்கின்ற அனைத்து தேர்வுகளுக்கும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக 279 கேள்வித்தாள் கட்டுக்காப்பு மையங்கள் அமைக்கப்பட்டு அந்த இடங்களில் 24 மணி நேர ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். தேர்வு மையங்கள், கேள்வித்தாள் காப்பு மையங்கள், விடைத்தாள் சேகரிப்பு மையங்களில் ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்வு மையங்களை பார்வையிட 4291 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் செல்போன் வைத்திருத்தல்,துண்டுத்தாள் வைத்திருத்தல் ,பார்த்து எழு துதல் உள்ளிட்ட ஒழுங்கீனச் செயல்களுக்கு உடந்தையாகவோ, ஊக்கப்படுத்தவோ பள்ளி நிர்வாகம் முயற்சித்தால் பள்ளி தேர்வு மையத்தை ரத்து செய்தும், பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் .தேர்வுமையங்களுக்குள் ஆசிரியர்களும் செல்போன் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *