• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

வடையில் பிளாஸ்டிக் கவர்..! பொதுமக்கள் அதிர்ச்சி..!

ByKalamegam Viswanathan

Dec 17, 2023

மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் அஜித் குமார். இவர் நேரு நகர் பகுதியில் உள்ள தனியார் டயர் விற்பனை செய்யும் கம்பெனியில் பணியாளராக வேலை செய்து வருகிறார். இன்று காலை தன்னுடன் பணிபுரியும் பணியாளர்களுக்கு வடை வாங்குவதற்காக மதுரை பழங்காநத்தம் ஜெயம் தியேட்டர் அருகே ராணி கல்யாண மஹால் எதிரே உள்ள பெருமாள் என்பவருடைய வடை கடைக்கு சென்று 20 வடைகள் பார்சல் வாங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து அஜித் குமார் பணிபுரியும் நேரு நகர் பகுதியில் இவர் பணிபுரியும் டயர் விற்பனை செய்யும் கடையில் தன்னுடன் பணிபுரியும் பணியாளர்களுக்கு வடையை பிரித்துக் கொடுத்துள்ளார். அப்போது ஒரு வடையை காளமேகம் என்ற நபர் சாப்பிடும் போது உள்ளே பிளாஸ்டிக் பேப்பர் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் இதுபோன்று கவனக்குறைவான செயல்களில் ஈடுபடும் உணவு பண்டங்கள் விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் மீது உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.