• Sat. Aug 15th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

குவைத் மன்னர் சேக் நவாப் அல் சபா மறைவையொட்டி தேசியக் கொடிகள் ஒருநாள் அரைக்கம்பத்தில் பறக்க உத்தரவு…

ByKalamegam Viswanathan

Dec 17, 2023

குவைத் மன்னர் சேக் நவாப் அல் சபா மறைவையொட்டி மதுரை விமான நிலையத்தில் உள்ள தேசியக் கொடிகள் ஒருநாள் அரைக்கம்பத்தில் பறக்க உத்தரவு விடப்பட்டுள்ளது.

குவைத் மன்னர் ஷேக் நவாப் அல் சபா அவர்கள் நேற்று மறைவையொட்டி இந்திய அரசு அஞ்சலி செலுத்தி, இரங்கல் தெரிவிக்கும் விதமாக ஒரு நாள் துக்க தினமாக அறிவித்து நாடு முழுவதும் தேசிய கொடி கம்பத்தில் பறக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதனை தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் உள்ள 80 அடி கம்பத்தில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் கொடி பறக்க உத்தரவிட்டதை தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் உள்ள தேசியக்கொடி கம்பத்தில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கிறது.