

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஆலங்குளத்தில் அரசுக்கு சொந்தமான சிமெண்ட் ஆலை 50 ஆண்டுகளைக் கடந்து இயங்கி வருகிறது. ஏராளமான பரப்பளவில் ஆலங்குளம் சிமெண்ட் ஆலைக்கு சொந்தமான இடங்கள் உள்ளன. அதில் இருந்து சுண்ணாம்பு கற்கள் எடுக்கப்பட்டு சிமெண்ட் தயாரிக்கப்பட்டு வருகிறது. கிடைத்த உபரி வருமானத்தை கொண்டு ஆஸ்பெஸ்டாஸ் தயாரிக்கும் ஆலை உருவாக்கப்பட்டது. சிமெண்ட் மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் தரமாக இருந்ததால் விற்பனை அதிகரித்து வந்தது.

அதன் மூலம் கிடைத்த வருமானத்தைக் கொண்டு டான்செம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி உருவாக்கப்பட்டது. சுற்றுவட்டாரத்தில் உள்ள மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் கல்வி வழங்கப்பட்டது.
தமிழக அரசு திட்ட பணிகளுகளான சிமெண்ட் சாலை, கட்டிட பணிகளுக்கு அரசு சிமெண்ட் மட்டுமே பயன்படுத்தப்பட்டது.இதனால் ஆலங்குளம் அரசு சிமெண்ட் அலையில் அதிக அளவில் சிமெண்ட் உற்பத்தி செய்யப்பட்டது. இதனால் ஆலங்குளத்தை சுற்றி ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று வந்தனர்.
இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளாக ஆலையை நவீனப்படுத்த அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதனால் சிமெண்ட் ஆலயில் உற்பத்தி செய்யக்கூடிய எந்திரங்கள் பழுது காரணமாக உற்பத்தி குறைய தொடங்கின. தமிழக அரசு பணிகளுக்கு அரசு சிமெண்ட் பயன்படுத்துவதும் முற்றிலும் நின்று போனது, தனியார் நிறுவனங்களில் சிமெண்ட் வாங்கத் தொடங்கினார்.
இதனால் ஆலங்குளம் சிமெண்ட் ஆலை அரசு ஊழியர்களுக்கு சலுகைகளை குறைத்ததால் தற்காலிக பணியாளர்கள் பெரும்பாலானவர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டனர். நிரந்தர பணியாளர்கள் அரியலூரில் உள்ள அரியலூர் சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைககப்பட்டனர்.
ஆலையை பாதுகாக்க நவீனப்படுத்த அறிவிக்கப்பட் நிதியை வழங்க வலியுறுத்தி சிமெண்ட் ஆலை பாதுகாப்பு கமிட்டினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

