

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பேரூர் கழகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது கூட்ட ஏற்பாடுகளை பேரூர் கழக செயலாளர் பொன்ராஜ் பாண்டியன் செய்திருந்தார்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய முன்னாள் அமைச்சரும் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் கே டி ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் சேத்தூர் பகுதியில் நீங்கள் நன்றாக பாடுபட்டால் தான் 2026 ஆட்சியைப் பிடிக்க முடியும் . பெண்கள் ஆதார் கார்டுகளை கொடுத்து போன் நம்பரை கொடுத்து அதிமுகவில் தங்கள் இணைத்துக் கொண்டு வருகின்றனர்.
யாரும் ஆதார் கார்டு போன் நம்பரை கொடுக்க முன்வர மாட்டார்கள் அதிமுக மீது நம்பிக்கை வைத்து கொடுக்கின்றார்கள். ஏன் என்றால், அதிமுக தாய்மையை நேசிக்கின்ற தாய்மை உள்ளம் கொண்ட கட்சி பெற்ற வரைக்கும் மற்றவரையும் ஒரே மாதிரி பார்க்கின்ற கட்சி அதிமுக திமுக நம்பிக்கை துரோகம் செய்கின்ற கட்சி தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தி விட்டார்கள். ரேஷன் கடைகளில் பருப்பு இல்லை சீனி இல்லை எண்ணெய் கிடைப்பதில்லை எல்லா திட்டங்களும் நிறுத்திவிட்டு மக்களை ஏமாற்றுகின்றனர்.
ஆகையால் நீங்கள் கடுமையாக உழைத்து 2026 சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டுமென சிறப்பு உரையாற்றினார். இந்த நிகழ்ச்சிகள் விருதுநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எம் என் கிருஷ்ணராஜ். ஒன்றிய செயலாளர் குருசாமி, இராஜபாளையம் வடக்கு நகர செயலாளர் துரை முருகேசன், மேற்கு ஒன்றிய செயலாளர் அழகாபுரியன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

