

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் தொடங்கியது. இராஜபாளையம் நகர் கூடைப்பந்து கழகம் சார்பில் 30 வது ஆண்டு அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் பி.ஏ.சி.எம் பள்ளி மைதானத்தில் மின்னொளி போட்டியாக கடந்த 10ம் தேதி துவங்கியது .

இதில் இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை, கேரள மின்வாரியம், போலீஸ், பேங்க் ஆப் பரோடா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணி போன்றவைகள் பங்கேற்று ஆடுகின்றன. பெண்கள் பிரிவில் மேற்கு ரயில்வே மும்பை, வருமான வரித்துறை சென்னை, கேரள மின்வாரியம், ரைசிங் ஸ்டார் சென்னை அணிகள் பயிற்சியாளர் மேலாளர் என 170 பேர் பங்கேற்றனர்.
நாக் அவுட் சுற்றுக்களாக நடைபெற்ற இந்த இறுதி போட்டிகள் (நேற்று இரவு ) மே 15-ல் நடைபெறும் இறுதி போட்டியில் பெண்கள் பிரிவில் முதலிடத்தை கேரளா மின்வாரிய அணியும் இரண்டாவது இடத்தை வருமான வரித்துறை அணியும் மூன்றாவது இடத்தை ரைசிங் ஸ்டார் சென்னை அணியும் நான்காவது இடத்தை மும்பை மேற்கு ரயில்வே அணியும் பிடித்தனர் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பையும் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது .
இதேபோல் ஆண்கள் பிரிவில் முதலிடத்தை பேங்க் ஆப் பரோடாவும் இரண்டாவது இடத்தை இந்திய ராணுவணியும் மூன்றாவது இடத்தை இந்திய கடற்படையும் நான்காவது இடத்தை கேரளா மாநிலம் மின்வாரிய அணியும் பிடித்தனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பையும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
இந்த கூடைப்பந்து போட்டிக்கான ஏற்பாடுகளை இராஜபாளையம் நகர கூடைப்பந்துக் கழக தலைவர் ராம்குமார்ராஜா, செயலாளர் பீமானந்த், பொருளாளர், ராம்சிங்ராஜா மற்றும் நிர்வாகிகள் செய்தனர்.

