• Wed. Apr 24th, 2024

தொலைபேசி அழைப்புகளை சேமித்து வைக்க வேண்டும்…மத்திய அரசு உத்தரவு

Byகாயத்ரி

Dec 25, 2021

தொலைபேசி அழைப்புகள், இணையதள பயன்பாடு ஆகியவற்றின் தரவுகளை குறைந்தது 2 ஆண்டுகளுக்கு சேமித்து வைக்கவேண்டும் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய தொலைத்தொடர்புத் துறை வெளியிட்டுள்ள உத்தரவில், சந்தாதாரர்களின் நலன், பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களுடைய தொலைபேசி அழைப்புகள், இணையதள பயன்பாடு ஆகியவற்றின் தரவுகளை முன்பு ஓராண்டு வரை சேமித்து வைத்திருக்க வேண்டும் என்ற விதி இருந்தது.

இதை மாற்றி தற்போது குறைந்தது 2 ஆண்டுகள் வரை சேமித்து வைக்க வேண்டும் என்ற விதி அமலுக்கு வருகிறது. இதற்காக வழங்கப்பட்ட உரிமத்தில் கடந்த 20-ம் தேதி திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

தொலைத்தொடர்பு சேவையை வழங்குவதற்காக உரிமம் பெற்ற நிறுவனங்கள் அனைத்து வர்த்தக அழைப்புகள், அழைப்பு தொடர்பான விரிவான விவரங்களை குறைந்தது 2 ஆண்டுகளுக்காவது சேமித்து வைத்திருக்க வேண்டும். அதேபோல் சந்தாதாரர்கள் பயன்படுத்திய இணையதளங்கள், லாக்-இன், லாக்-அவுட் செய்த விவரங்களை சேமித்து வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *