இலங்கையில் கடந்த சில மாதங்களாக அதிரடியாக உயர்ந்துவந்த பெட்ரோல் ,டீசல் விலை தற்போது ரூ20 வரை குறைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். எரிபொருள் வாங்க வரிசையில் தொடர்ந்து பல நாட்கள் காத்திருந்ததில், கிட்டத்தட்ட 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இலங்கையின் அரசு நிறுவனமான சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் டீசல் மற்றும் பெட்ரோல் சில்லறை விலைகளை தலா 20 ரூபாய் குறைத்துள்ளது. கடந்த 6 மாதங்களில் ஐந்து முறை விலை உயர்வுக்கு பிறகு தற்போது விலை குறைந்துள்ளது. அதன்படி குறைக்கப்பட்ட பெட்ரோல், டீசல் விற்பனை நேற்று இரவு 10.00 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.
அதன்படி, ஒக்டென் 92 ரக பெட்ரோல் 20 ரூபாய் குறைந்து ரூ.450-க்கும், ஒக்டென் 95 ரக பெட்ரோல் 10 ரூபாய் குறைந்து குறைக்கப்பட்டு, ரூ. 540-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் டீசல் 20 ரூபாய் குறைந்து ரூ.440-க்கும், சுப்பர் டீசல் 10 ரூபாய் குறைந்து ரூ.510-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பொருளாதார நெருக்கடியிலும் இலங்கையில் பெட்ரோல்,டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது , ஆனால் இந்தியாவில் குறைப்படுவது எப்போது என மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.