
தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுக கட்டுமான பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி அகில இந்திய மீனவர் காங்கிரஸ் செயலாளர் தலைமையில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தேங்காய்பட்டணம் மீன்பிடி துறை முகம் மறு சீரமைப்பு பணி 116 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வருகிறது.இப் பணிக்கான கற்கள் குமரி மாவட்டம் கப்பியறை பேரூராட்சிக்கு உட்பட்ட ஓலவிளை கல் குவாரியில் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது.ஆனால்கல்குவாரிக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்து மூட வேண்டும் என்று சிலர் மாவட்ட ஆட்சி தலைவரை சந்தித்து மனு அளித்தனர்.அதற்கு எதிர்ப்பு தெரிவித்து.மேற்படி கல் குவாரியை தொடர்ந்து இயக்க கேட்டும்.தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுக கட்டுமான பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தியும். தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தை சுற்றியுள்ள கல் குவாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக அனுமதியளிக்க கேட்டும்.மீனவர் காங்கிரஸ் சார்பில் அகில இந்திய மீனவர் காங்கிரஸ் செயலாளர் ஜோர்தான் தலைமையில் குமரி மேற்க்கு மாவட்ட மீனவர் காங்கிரஸ் தலைவர் பிரடி கென்னடி முன்னிலையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
