• Fri. Apr 19th, 2024

பட்டினப் பிரவேசம் நடத்த முதல்வர் அனுமதி

ByA.Tamilselvan

May 8, 2022

பட்டினப்பிரவேசம் விவகாரம் கடந்த சில தினங்களாக தமிழகதக்தில் பரபரப்பாக பேசப்பட்டுவந்தது.தற்போது பட்டினப்பிரவேசத்திற்கு முதல்வர் அனுமதி வழங்கியதாக
தருமபுரம் ஆதீனம் தெரிவித்துள்ளார்.
தருமபுரம் ஆதீனத்தில் பாரம்பரியமாக நடைபெறும் பட்டின பிரவேசம் நிகழ்வுக்கு மாவட்ட வருவாய்த் துறை தடை விதித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தடையை நீக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளன. மதுரை ஆதீனம் உள்ளிட்ட மத குருமார்களும், பாஜக தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா உள்ளிட்டோரும் பட்டினப் பிரவேசத்தை கண்டிப்பாக நடத்துவோம் என்று தெரிவித்துள்ளனர். இந்த விஷயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சுமுகமான முடிவு எடுப்பார் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
மனிதனை மனிதன் சுமக்கும் நடைமுறையை நிறுத்தவேண்டும் எனவும்,இல்லை பட்டினபிரவேசம் பராம்பரியமாக நடைபெறும் நிகழ்ச்சி இதற்கு அனுமதி அளிக்கவேண்டும் எனவும் விவாதங்கள் சூடுபிடித்தன.
இந்நிலையில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மயிலாடுதுறை தருமை ஆதீனம் தம்பிரான் சுவாமிகள், மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமி, கோவை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் உள்ளிட்டோர் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர்.
அப்போது அவர்கள் மு.க.ஸ்டாலினுக்கு பொன்னாடை அணிவித்து, தி.மு.க. ஆட்சி அமைத்து ஓராண்டு நிறைவு பெற்றதற்காக வாழ்த்து தெரிவித்தனர். மேலும், தருமபுர ஆதீன பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், தருமபுரம் ஆதீனம் இன்று மயிலாடுதுறையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பட்டின பிரவேசம் நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாய்மொழியாக அனுமதி வழங்கியிருப்பதாக கூறினார். இந்நிகழ்வுகளை பார்க்கும் போது விரைவில் பட்டினப்பிரவேசத்திற்கு அரசு அனுமதி கிடைக்கும் என தோன்றிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *