• Thu. Mar 27th, 2025

மக்கள் குறைதீர்க்கும் நாள்.., மேயர்…

ByKalamegam Viswanathan

Aug 23, 2023

மதுரை மாநகராட்சி பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது.
மதுரை மாநகராட்சி மண்டலம் 2 (வடக்கு) அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது.
மதுரை மாநகராட்சி மண்டலம் 2 (வடக்கு) அலுவலகத்தில் காலை 10.00 மணிக்கு தொடங்கி 12.30 மணி வரை நடைபெற்ற, பொது மக்கள் குறைதீர்க்கும் முகாமில் சொத்து வரி திருத்தம் 11 மனுக்களும், சாலைவசதி, பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் உள்ளிட்ட வசதிகள் வேண்டி 6 மனுக்களும் என, மொத்தம் 16 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து மேயரால், நேரடியாக பெறப்பட்டது. சென்ற குறைதீர்க்கும் முகாமில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 25 மனுக்களில் 22 மனுக்களுக்கு தீர்வு காணப் பட்டுள்ளது மீதமுள்ள மனுக்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இம்முகாமில், மண்டலத் தலைவர் சரவணபுவனேஸ்வரி, துணை ஆணையாளர் தயாநிதி உதவி ஆணையாளர் (பொ) காளிமுத்தன், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், சுகாதார அலுவலர் சிவசுப்பிரமணியன், உதவி வருவாய் அலுவலர் அகமது இப்ராஹிம், உதவி செயற்பொறியாளர் (திட்டம்) சுப்புத்தாய், உதவிப் பொறியாளர் பொன்மணி, கண்காணிப்பாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.