• Thu. Sep 28th, 2023

தமிழத்தில் புரட்சி செய்ததால்.., புரட்சித்தமிழர் என்ற பட்டத்தை மதுரை மக்கள் சூட்டியுள்ளனர்…

மாநாட்டு வெற்றியை உலகமே பாராட்டிய போது வெற்றியை ஏற்க முடியாதவர்கள், மீதமாக இருந்த  புளியோதரையை மிகைப்படுத்தி காட்டியுள்ளார்கள். 

சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

எடப்பாடியாருக்கு புரட்சித்தமிழர் பட்டத்தை வழங்கியதை முன்னிட்டு, அதனை கொண்டாடும் வகையில் கழக அம்மா பேரவையின் சார்பில் காந்தி மியூசியத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.

 இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ் எஸ் சரவணன், கே தமிழரசன், கருப்பையா ,மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் வெற்றிவேல், மாநில நிர்வாகிகள் ஏகேபி சிவசுப்பிரமணியன், ராமகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் திருப்பதி மற்றும் நெல்லை பாலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்.பி உதயகுமார் கூறியதாவது,

புரட்சித்தலைவர் சத்துணவு திட்டம் தந்தார் சரித்திரம் படைத்தார். 

புரட்சித்தலைவி அம்மா அம்மா உணவகம் உட்பட பல்வேறு திட்டங்களை தந்தார் அதே வரிசையில் குடிமராமத்து திட்டங்கள் ,50 ஆண்டு காவிரி பிரச்சனைக்கு தீர்வு, 7.5 இட ஒதுக்கீடு இது போன்ற திட்டங்களை தந்து தமிழகத்தில் புரட்சி படைத்ததால், மீண்டும் தமிழகத்தில் இது போன்ற புரட்சியை படைக்க வேண்டும் என்று எடப்பாடியாருக்கு புரட்சி தமிழர் என்ற பட்டத்தை மதுரை வாழ் சர்வ சமயப் பெரியோர்கள் பட்டத்தை சூட்டியுள்ளார்கள் இதன் மூலம் மதுரை பெருமையடைந்துள்ளது.

ஆனால் புரட்சிதமிழர் பட்டத்தை எடப்பாடியாருக்கு கொடுத்ததை கண்ணிருந்தும் குருடர் போல் சில கயவர்கள் அவர் என்ன புரட்சி செய்தார் என்று கேட்கிறார்கள் அவர்களுக்கு மனசாட்சி இருந்தால் அவர் ஆற்றிய மக்கள் நலத்திட்டங்களை நினைத்துப் பார்த்தால் தெரியும் அது அவருக்குரிய பட்டம் என்று.

 புரட்சித்தலைவர் ,புரட்சித்தலைவி அம்மா அதனைத் தொடர்ந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் புரட்சித்தமிழர் எடப்பாடியார் என்று வரலாற்றில் பொன் எழத்துக்களால் பொறிக்கப்படும்.

30 கிலோ மீட்டர் தொலைவிற்கு தொண்டர்கள் காத்திருந்து மாநாட்டுக்கு வந்தனர்.

அதிமுக மாநாடு மதுரை மண்ணுக்கு பெருமையாக அமைந்துள்ளது.

மாநாட்டில் அதிமுக கொடியேற்றிய எடப்பாடியார் விரைவில் சென்ஜார்ஜ் கோட்டையில் தேசிய கொடியை கொடியேற்றுவார். 8 கோடி தமிழர்களும் உணர்வாலும், உடலாலும் மாநாட்டில் பங்கேற்று உள்ளனர்.எடப்பாடியார் தமிழக மக்களை காப்பார் என 8 கோடி மக்களும் நினைக்கிறார்கள்.

மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாட்டுக்கு உரிய காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று நீதியரசர் கூறினார்கள். ஆனால் காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்கவில்லை.மதுரை மாவட்ட காவல்துறை காழ்ப்புணர்வுடன் செயல்பட்டது.மாநாட்டிற்கு வந்த வாகனங்களை 30 கி.மீ தொலைவுக்கு முன்பாகவே திசை திருப்பியதால் தொண்டர்கள் வருவதில் பல தடைகள் ஏற்பட்டது.

 தடைகளை தாண்டி மாநாட்டுக்கு 15 லட்சம்  தொண்டர்கள் வந்துள்ளனர்.

இந்த மாநாட்டின் சிறப்பை உலகமே ஏற்றுக் கொண்டு  கொண்டாடும் வகையில் சிலர் கரும்புள்ளி வைத்து மகிழ்ச்சி அடைகின்றனர். 15லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது. ஆனால் பாத்திரம் எடுத்துச் செல்லும் பொழுது கொஞ்சம் மிச்சம் இருந்தது,  சில சிதறி கிடந்ததை எடுத்துக்காட்டி மிகைப்படுத்திவதை வேதனையாக உள்ளது .

கல்யாண வீடு, காதுகுத்து, சடங்கு போன்ற நிகழ்ச்சிகளில் 100 பேருக்கு உணவு வழங்குவது சவாலான காரியம். 50 லட்சம் பேர் வருகை தந்தனர் இதில் 15 லட்சம் பேர் பல்வேறு தடைகளை தாண்டி மாநாட்டில் பங்கேற்றனர். அவர்களுக்கு உணவு, குடிநீர், பத்திரமாக திருப்பி அனுப்பினோம்.

 மாநாட்டின் வெற்றியை உலகமே பாராட்டிய போது சிந்தி கிடந்ததை பெரியதாக மிகைப்படுத்தி காட்டியுள்ளார்கள். ஏறத்தாழ ஒரு லட்சத்து 10 ஆயிரம் கிலோ அரிசியில் உணவு தயார் செய்யப்பட்டது. இந்த சூழ்ச்சிகள் எடுபடாது, மாநாட்டை வெற்றியை யாரும் குறை சொல்வதற்கு எந்த விஷயம் கிடைக்கவில்லை அதனால் புளியோதரை தோல்வியை பேசுகிறார்கள்.

மாநாட்டில் 750 அடுப்பில் உணவு தயாரிக்கப்பட்டது அதில் ஏதாவது ஒரு அடுப்பில் தொண்டர்கள் அளவுக்கு அதிகமாக வந்திருந்த காரணத்தினால், அவசரமாக சரியாக வேகாமல் கொடுத்திருக்கலாம்,  அதைக் கூட நாங்கள் உறுதிப்படுத்தவில்லை விசாரணை செய்து வருகிறோம். அதை மிகைப்படுத்தி ஊடகம் செய்து வெளியிட்டு வருவது யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உலகமே பாராட்டி கொண்டிருக்கும் பொழுது ஒரு ஓரத்தில் ஒப்பாரி வைப்பது போல உள்ளது.

எடப்பாடியார் 7.5 சகவீத இட ஒதுக்கீடு கொண்டு வரும் போது சில எதிர்ப்புகள் இருந்தது. அதை எல்லாம் தகர்த்தெறிந்து, எனக்கு முதலமைச்சர் பதவி முக்கியமல்ல மாணவர் நலந்தான் முக்கியம் என்று கூறி அதைக் கொண்டு வந்து வெற்றி அடைந்தார். இந்த நீட்டை திமுக ,காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தான் கொண்டுவரப்பட்டது அதற்குரிய ஆதாரத்தை மாநாட்டின் மேடையிலே எடப்பாடியார் காண்பித்தார்.

நீட் எதிர்ப்பு கொள்கையில் அதிமுக உறுதியாக உள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினோம். 

ஆட்சிக்கு வந்தால் நீட் எதிரான முதல் கையெழுத்து போடுவோம் என்று கூறினார்கள்  கையெழுத்து             போடுவதற்கு பேனா கிடைக்கவில்லையா அல்லது கடலில் வைக்கப்படும் பேனாவில் கையெழுத்து போடுவார்களா? ஆட்சிக்கு வந்தால் நீட்டு ரத்து செய்வோம் என சொன்ன உதயநிதி, இப்போது ராகுல் ஆட்சிக்கு வந்தவுடன் நீட்டை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்போம் என்கிறார். உதயநிதி இரட்டை வேடம் போடுகிறார்.

 இனிமேல் டி.டி.வி.தினகரன் பேச்சு எடுபடாது.தென்மாவட்டத்திற்கு வர முடியுமா என்று கூறினார்கள் .தென் மாவட்டத்திற்கு எடப்பாடியார் வந்து விட்டார் ஆனால் அவர்களைக் காணோம். இனி பொய் சொல்லி தொண்டர்களை ஜாதி, மதம், மொழி ரீதியாக பல சூழ்ச்சிகளை நம்ப வைக்க முடியாது அந்த அளவில் எழுச்சி மாநாடு நடைபெற்றது அதனால் தான் புரட்சித் தமிழர் என்ற பட்டம் கொடுத்து விட்டனர் இனிமேல் அவர்களின் பொய் பேச்சு எடுபடாது.

ஜெயிலர் படத்தை விட அதிமுக மாநாடு பேசப்பட்டது. உண்ணாவிரதத்தில் உதயநிதி பேசியதை பார்த்து மக்கள் சிரித்து வருகிறார்கள் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *