• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கக் கூடாது..,மாற்றுத்திறனாளிகள் ஆணையர் கடிதம்..!

Byவிஷா

May 30, 2023
TN Government

பல்வேறு அலுவல் காரணமாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்கு வருகை தரும் மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது என மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அனைத்து மாவட்ட அலுவலருக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.
தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நல வாரியம் மறுசீரமைப்பட்டு அதன் முதற் கூட்டம் 10.10.2022 அன்று மாலை 3.00 மணி அளவில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அமைச்சர் தலைமையில் மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரகத்தில் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் வாரிய உறுப்பினர்கள் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகங்களில் பல்வேறு அலுவல் காரணமாக வரும்பொழுது அவர்களை அவமதிக்கும் விதமாக எந்த செயலையும் செய்தால் உரிய அலுவலர் மற்றும் பணியாளர் மீது மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டம் பிரிவு 92 உட்பிரிவு(எ)ன்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என கோரியுள்ளனர்.அதன்படி அலுவலகங்களுக்கு வரும் மாற்றுத் திறனாளிகளை அவமதிக்கும் விதமாக நடந்துகொள்ளக் கூடாது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.