• Thu. Sep 28th, 2023

பராமரிப்பு பணிகளுக்காக இன்று ஒருநாள் மூடப்படும் ஈஷா யோகா மையம்..!

Byவிஷா

May 30, 2023

ஆண்டுதோறும் மே 30ஆம் தேதியன்று நடைபெறும் பராமரிப்பு பணிகளுக்காக கோவையில் ஈஷா யோகா மையம் மூடப்படுவதாக அம்மையம் அறிவித்துள்ளது.
கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு இந்தியா மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் மக்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக ஈஷாவில் அமைந்துள்ள தியானலிங்கம், லிங்கபைரவி மற்றும் ஆதியோகி தரிசனம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வந்து செல்கிறார்கள். இந்நிலையில் பராமரிப்பு பணிகள் காரணமாக தியானலிங்கம் மற்றும் ஆதியோகி வளாகங்கள் இன்று ஒருநாள் மூடப்படுமென ஈஷா யோகா மையம் அறிவித்துள்ளது.
பராமரிப்பு பணிக்காக கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையம் ஆண்டுதோறும் மே 30ம் தேதி ஒரு நாள் மூடப்படுவது வழக்கம். அந்த வகையில், இன்று மூடப்படும் ஈஷா யோகா மையத்திற்கு பக்தர்கள் வருகை தருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *