• Fri. Apr 26th, 2024

பா.ஜ.க வை ஆதரித்தால் மக்களின் ஓட்டுரிமை பறிபோகும்

ByA.Tamilselvan

Aug 10, 2022

பாஜக வை வளரவிட்டால் மக்களின் ஓட்டுரிமை பறிபோகும் என அகிலேஷ் யாதவ் எச்சரிக்கை.
உத்தரபிரதேசத்தின் கன்னாஜ் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்
, ‘உங்கள் வேலைவாய்ப்பு பறிக்கப்படுகிறது, அரசியல்சாசனம் தாக்குதலுக்கு உள்ளாகிறது. இந்த மக்கள் (பா.ஜனதா) அதிகமாக வலுவடைந்தால் உங்கள் வாக்குரிமை பறிபோகும். இதை நீங்கள் நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளக்கூடாது’ என்று தெரிவித்தார். இதையும் படியுங்கள்: ஆங்கிலேயர்களை ஆர்.எஸ்.எஸ். ஆதரித்தது: பிரியங்கா குற்றச்சாட்டு அவர் மேலும் கூறுகையில், ‘அண்டை நாடான சீனாவில் தேர்தல் ஏதாவது நடக்கிறதா? அதற்கு அப்பால் போனால் ரஷியாவிலும் தேர்தல்கள் இலலை. பாகிஸ்தானில் ராணுவம் விரும்பும் அரசு அமைகிறது. மியான்மர் உள்ளிட்ட அண்டை நாடுகளில் தேர்தல்கள் இல்லை. எனவே எச்சரிக்கை தேவை’ என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *