

பிரதமர் மோடியின் சொத்துமதிப்பு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு உயர்ந்துள்ளதாக தகவல்
கடந்த மார்ச் 31-ந் தேதி வரையிலான கடந்த நிதி ஆண்டுக்கான பிரதமர் மோடியின் சொத்து விவரம், பிரதமர் அலுவலக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முந்தைய ஆண்டை விட அவரது அசையும் சொத்துகள் ரூ.26 லட்சத்து 13 ஆயிரம் உயர்ந்துள்ளது. தற்போதைய சொத்து மதிப்பு ரூ.2 கோடியே 23 லட்சம். அவற்றில் பெரும்பாலானவை வங்கி டெபாசிட்கள் ஆகும்.
கடன் பத்திரங்கள், பங்குகள், பரஸ்பர நிதியம் ஆகியவற்றில் எந்த முதலீடும் இல்லை. கைவசம் ரொக்கமாக ரூ.35 ஆயிரத்து 250 வைத்துள்ளார். அஞ்சலகத்தில் ரூ.9 லட்சத்து 5 ஆயிரம் மதிப்புள்ள தேசிய சேமிப்பு பத்திரங்களும், ரூ.1 லட்சத்து 89 ஆயிரம் மதிப்புள்ள எல்.ஐ.சி. பாலிசிகளும், ரூ.1 லட்சத்து 73 ஆயிரம் மதிப்புள்ள 4 தங்க மோதிரங்களும் வைத்துள்ளார். ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தனக்கு ரூ.2 கோடியே 54 லட்சம் மதிப்புள்ள அசையும் சொத்துகளும், ரூ.2 கோடியே 97 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துகளும் இருப்பதாக கணக்கு சமர்ப்பித்துள்ளார்.
