• Tue. Feb 18th, 2025

பொள்ளாட்சியில் ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்..!

பொள்ளாச்சி மற்றும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருவது அரசியல் கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
பொள்ளாச்சியில் உள்ள ஏழு பேரூராட்சிகளில் காலை 7 மணி முதல் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். பொள்ளாச்சியில் மொத்தம் உள்ள 36 வார்டுகளில் அதிமுக, திமுக கட்சியினர் தங்களுக்கு வாக்களிக்க வேண்டுமெனவும் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தும் வருகின்றனர். மேலும் கோவை மாவட்ட கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் காவல்துறையினர் ஓட்டுப்போடும் இடங்களில்கூட வேண்டாமென காவல்துறையினர் வாகனம் மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். பதட்டமான வாக்குச்சாவடிகள் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.