• Tue. Feb 18th, 2025

வேலூரில் ஆக்கிரமிப்பு கடைகளால் மக்கள் அவதி!

Byமதன்

Jan 28, 2022

வேலூர் மாவட்டம், மாநகராட்சி இரண்டாம் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியான பழைய பேருந்து நிலையத்தில் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு அதிக கடைகள் இயங்கி வருவதால், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாகவும், அதிக விபத்துகள் உண்டாகும் நிலையும் உள்ளது!

இதற்கு காரணமாக, வைக்க வேண்டிய இடத்தில் கடைகளை வைக்காமல் சாலையோரத்தில் வாகனம் செல்லக்கூடிய இடங்களில் கடைகள் என்கின்றனர் வாகனஓட்டிகள்! இது குறித்து காவல்துறையும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது! விரைவில், இப்பிரச்சனை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களும், வாகனஓட்டிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்!