
ஆண்டிபட்டி அருகே ரெங்கசமுத்திரம் அரசு பள்ளி மாணவி சிவரஞ்சனி ‘நீட்’ தேர்வில் தேர்வாகி, மதுரை தனியார் மருத்துவக் கல்லூரியி|ல் இட ஒதுக்கீடு கிடைத்துள்ளது.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே நாச்சியார்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன் (50). இவர் விவசாயம் பார்த்துக்கொண்டு, ஓட்டல் வேலையும் செய்து வருகிறார்.
இவரது மனைவி பிரியா (44).
இவர்களுக்கு வெங்கடேஷ் என்ற மகனும் சிவரஞ்சனி (18) மற்றும் ஜான்சிராணி (16) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் விவேகானந்தா கல்லூரியில் வெங்கடேஷ் பி.எஸ்.சி., யும், ஆண்டிபட்டி அருகே உள்ள ரெங்கசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சிவரஞ்சனி ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் டூ வகுப்பு வரை படித்து வந்தார்.
ஜான்சி ராணி தற்போது பிளஸ் ஒன் படித்து வருகிறார்.
சிவரஞ்சனி, 2019 -20 ல் நடந்த பிளஸ் டூ தேர்வில் தமிழ் -92, ஆங்கிலம் -76, கணக்கு -86 இயற்பியலில் -78, வேதியில் -83, உயிரியல் -74 ஆக மொத்தம் 600 மார்க்கிற்கு 489 மார்க் எடுத்து உள்ளார்.
இந்த நிலையில், மருத்துவம் படிப்பதற்கு ஆசைப்பட்ட சிவரஞ்சனி, இந்த ஆண்டில் ‘நீட்’ தேர்வை எதிர்கொண்டு 720 மார்க் கிற்கு 270 மார்க் பெற்று, அரசு பள்ளி இட ஒதுக்கீட்டில் 7.5 சதவீதத்தில், பி.சி., பிரிவில் 123வது இடம் பெற்று, மதுரையில் உள்ள வேலம்மாள் தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.
இதனால், அவரது பெற்றோர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் மிக்க மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.
