

சோழவந்தான் வட்டார அடகு கடை உரிமையாளர் சங்க ஆண்டு விழா நடந்தது. இவ்விழாவிற்கு சோழவந்தான் அரிமா சங்கத் தலைவரும், தொழிலதிபருமான டாக்டர் மருது பாண்டியன் தலைமை தாங்கினார் .சாமிநாதன், கோபி, கோபால், ரத்தினம் ஆகியோர் முன்னிலை வைத்தனர். பொருளாளர் இருளப்பன் வரவேற்றார். செயலாளர் காளீஸ்வரன் ஆண்டறிக்கை வாசித்தார். சேது பாண்டியன் நன்றி கூறினார். இதைத் தொடர்ந்து சங்கத்தின் வளர்ச்சிகள் குறித்து பேசப்பட்டது. புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுத்தனர்.

