திருநெல்வேலி பேட்டை ரயில் நிலையத்தில் அதிமுக பிரமுகர் பிச்சைராஜ் (52)கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இவர் பேட்டை பகுதியில் பஞ்சாயத்து துணை தலைவராக பதவி வகித்துள்ளார். நேற்று அவர் பணிகளை முடித்துவிட்டு ரயில் நிலைய சுரங்கப்பாதையில் வரும் போது பதுங்கி இருந்த மர்ம நபர்கள் அவரை வெட்டி கொலை செய்துள்ளனர். ரத்த வெள்ளத்தில் கிடந்தவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
தற்போது இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.