
மதுரை திருநகரை சேர்ந்தவர் சேதுராமன்(லேட்) – லதா தம்பதியினர். சேதுராமன் திருநகரில் உள்ள முத்துதேவர் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளியில் ஆசையாக பணியாற்றியவர். அவரது மனைவி லதா தற்போது ஸ்ரீனிவாச காலனியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியினருக்கு முருகேசன் மற்றும் முத்தழகு 2 மகன்கள் உள்ளனர்.
சேதுராமனின் மூத்த மகன் முருகேசன் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் கணினி பொறியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் முருகேசன் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து முருகேசன் சென்னையில் இருந்து விடுமுறைக்காக தனது சொந்த ஊரான மதுரைக்கு சில நாட்களுக்கு முன் வந்துள்ளார். இந்த நிலையில் இன்று முருகேசன் தனது இறந்த தந்தையின் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு திருப்பரங்குன்றத்தில் உள்ள வெயிலுகுந்த அம்மன் கோவில் அருகில் டூவீலரை நிறுத்திவிட்டு திருப்பரங்குன்றம் மேம்பாலம் அருகே உள்ள தண்டவாளத்திற்கு சென்றுள்ளார். தான் இனிமேல் வீட்டிற்கு வரப்போவதாக இல்லை என்று தனது தாய் லதாவிற்கு வாட்ஸப் மூலம் ஆடியோ குறுஞ்செய்தி அனுப்பி விட்டு நெல்லையில் இருந்து சென்னை செல்லும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உறவினர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பரங்குன்றம் போலீசார் மற்றும் மதுரை சரக ரயில்வே போலீசார் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட முருகேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும்., முருகேசன் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டாரா.? அல்லது வேறு ஏதும் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா.? என்று மதுரை சரக ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

