கொரோனா என்ற பேராபத்து உலகையே ஸ்தம்பிக்க வைத்த ஒரு நிகழ்வு என்றாலும், இந்த கொரோனா பரவல் மனித வாழ்வில் நீங்காத ஒன்றாகிவிட்டது. இதனால் பலர் தன் வாழ்க்கையை தொலைத்துவிட்டு இருக்கும் இடம் தெரியாமல் வாழவும் வழி தெரியாமல் மன அழுத்தத்தில் தான் நடமாடிக்கொண்டிருக்கின்றனர்.இவர்களை தேடி கண்டுபிடித்து உதவ வேண்டுமென்று பல அமைப்புகள் இருந்தாலும் கூட என் நாடு என் தேசம் என்ற அறக்கட்டளை செய்த நிகழ்வுதான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது!
என் நாடு என் தேசம் அறக்கட்டளை நடத்துபவர்கள் யார்? அவர்களின் நோக்கம் என்ன?அதுவும் இயலாதவர்களுக்கு உதவும் நோக்கம் எவ்வாறு பிறந்தது என்பதை அறிய அந்த அறக்கட்டளையின் நிறுவனர் பவித்ரா சிவலிங்கத்திடன் பேசினோம்;

கொரோனா காலத்தில் மக்கள் மிகவும் சிரமித்திற்குள்ளானார்கள். ஊரடங்கின்போது ஒரு மதிய வேலையில் குடும்பத்துடன் எதாற்த்தமாக சாப்பிடும் போது தோன்றிய ஒன்று தான் என் நாடு என் தேசம் அறக்கட்டளை. வீட்டிலிருக்கும் நமக்கே பாதுகாப்பில்லாத அந்நேரத்தில் பலர் உண்ண உணவின்றி ரோட்டிலும் தெருக்கலிலும் பசியும், பட்டினியுமாக கிடந்ததுதான் நினைவில் வந்தது.அதை தொடர்ந்து நாமே உணவை சமைத்து கொடுத்தால் என்ன என்று தோன்றியது. அதனால் தொற்றைக்கூட பொருட்ப்படுத்தாமல் துணிந்து இறங்கி எங்கள் வீட்டிலே சமைத்து பல வீடில்லா அகதிகளுக்கும், உணவில்லமால் தவித்தவர்களுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் உணவு பொட்டலங்களை நாங்களே வழங்க தொடங்கினோம்.எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களே உணவு பொட்டலங்களை பல தெருக்களிலும், ரோட்டோரத்திலும் வசிக்கும் மக்களுக்கு வழங்க துவங்கினோம்.அன்றாட உணவிற்கே சிரமப்படும் மக்களை மகிழ்விப்பதே எங்களின் நோக்கம்.
அது மட்டுமல்லாமல், ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த காவலர்களுக்கும் உணவு, இரவு நேரங்களில் டீ போன்றவை நாங்களாகவே முன் வந்து வழங்கினோம்.இதை தொடர்ந்து நாங்கள் செய்யும் இச்சேவையை பாராட்டி காவல் நிலையத்திலும் உணவு பொட்டலங்களை வழங்க ஆரம்பித்தோம்.அப்போது துவங்கிய எங்களது சேவை இன்று வரையிலும் நீடித்துக்கொண்டே இருக்கிறது. கிட்டதட்ட ஒரு நாளைக்கு 1000 பேருக்கு உணவு வழங்கி வருகின்றோம்.கொரோனா காலத்தில் ஆரோக்கியமான உணவு மட்டுமல்லாமல் மாலை வேலையில் டி, காபியும் கொடுத்து வந்தோம்.ஏனோ தானோ என்று உணவு கொடுக்காமல் மக்களுக்கு நல்ல ஆரோக்கியமான உணவை மட்டுமே வழங்கி வருகிறோம்.
எங்கள் அறக்கட்டளையின் கோட்பாடு என்னவென்றால் உண்ண உணவில்லாதவர்கள், வீடில்லா அகதிகள், மனநலம் பாதிப்படைந்தோர், உடல் ஊனமுற்றோர், கணவனை இழந்த பெண்களுக்கு சேவை செய்வதும் அவர்களுக்கான தேவையை பூர்த்தி செய்வதும் தான். இதுவரை பல பேருக்கு இந்த அறக்கட்டளை சார்பில் நல்வழி காட்ட முயற்ச்சித்து வருகிறோம். தற்போது எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களும், எங்கள் நண்பர்களும் இச்சேவையில் கைக்கொடுத்து வருகிறார்கள். கொரோனா காலகட்டத்தை தொடர்ந்து இன்று வரையிலும் உணவு வழங்கி வரும் வேலையில் என் நாடு என் தேசம் அறக்கட்டளை அதன் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்க முடிவு செய்துள்ளது.இந்த அறக்கட்டளையின் மூலம் ஆதரவுற்றோருக்கு இல்லங்கள், முதியோர் இல்லம், விதவை மறுவாழ்வு இல்லம், இலவச மருத்துவமனை, தொழிற்கல்விக்கூடம், வழிபாட்டு தலங்களை நிறுவுதல், உதவி முகாம்கள், மாணவர்களுக்கு உதவித்தொகை, படிக்க பணம் இல்லாத ஆதரவற்ற பிள்ளைகளுக்கு உதவி போன்ற பல்வேறு நல திட்டங்களையும் நோக்கங்களையும் என் நாடு என் தேசம் அறக்கட்டளை தொடங்க உள்ளது. இதனை சாத்தியப்படுத்த விரும்பும் நல் உள்ளங்கள் ஆகிய நீங்களும் இதில் ஒரு பங்காக இருக்கலாம். அதற்கு எங்களை தொடர்புக்கொண்டு நீங்களும் என் நாடு என் தேசம் அறக்கட்டளையில் உங்களின் சேவையை மேற்க்கொள்ளலாம்.மேலும் விபரங்களுக்கு எங்களின் தொலைப்பேசி எண்ணிற்க்கோ அல்லது எங்ளின் இணையதள முகவரிக்கோ அனுகலாம். உங்களின் சேவை பல மக்களின் தேவை…
காலத்தி னால்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
இந்த குறளின் பொருள் தான் இந்த அறக்கட்டளை என்று நினைக்கிறோம்…
எங்களை அணுக:
சி. பவித்ரா சிவலிங்கம்
7010841329
து. சிவலிங்கம்
9884599763
ADV










- மதுரையில் மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்மாநில அரசை கண்டித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை சங்கங்களின் […]
- நவம்பர் 1 ஆம் தேதி மீண்டும் உள்ளாட்சி தினமாக கொண்டாடப்படும்…தமிழகத்தில் நவம்பர் 1 ஆம் தேதி மீண்டும் உள்ளாட்சி தினமாக கொண்டாடப்படும் என அறிவித்த தமிழக […]
- பள்ளி மாற்றுச்சான்றிதழில் தாய்மொழி – சீமான் பெருமிதம்நாம் தமிழர் கட்சி மேற்கொண்ட தொடர் முயற்சியின் விளைவாக இனி பள்ளி மாற்றுச்சான்றிதழில் தாய்மொழி குறித்த […]
- மதுரை ஆவினில் முறைகேடு- 30 பேரிடம் விசாரணைஆவினில் நடந்த முறைகேடுகள் குறித்து 30 பேரிடம் நேரில் அழைத்து விசாரணை செய்யப்பட்டுள்ளது.மதுரை ஆவினில் கடந்த […]
- உலக முழுவதும் வேகமாக பரவி வரும் குரங்கு அம்மைஉலகம் முழுவதும் 215 பேர் குரங்கம்மை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதாரஅமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.கொரோனா தொற்று […]
- புதிய கால்பந்து மைதானத்திற்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ள கால்பந்து மைதானத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.சென்னை […]
- முகம் வெள்ளையாக:பால் பவுடர் மற்றும் எலுமிச்சை சாறுபால் பவுடரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து பேஸ்ட் […]
- மகிந்த ராஜபக்சேவிடம் 5 மணி நேரம் விசாரணை-கைதாக வாய்ப்பு?இலங்கையில் போராட்டம் நடத்திய மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து முன்னாள் பிரதமர் ராஜபக்சேவிடம்5 மணி […]
- காலிஃப்ளவர் மசாலா:தேவையானவை :காலிஃப்ளவர் – 1, வெங்காயம் – 1, தக்காளி – 2, இஞ்சி-பூண்டு விழுது […]
- பெட்ரோல் இல்லை, பணம் இல்லை – பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் டுவிட்பாகிஸ்தானில் அந்நிய செலவாணி கையிருப்பு குறைவு உள்ளிட்ட காரணங்களால் பொருளாதார நெருக்கடி தொடங்கியுள்ளது.இலங்கையை தொடர்ந்து பாகிஸ்தானிலும் […]
- சிந்தனைத் துளிகள்• எல்லாத் துயரங்களையும் ஆற்றிவிடும் சக்தி காலத்திற்கு இருக்கிறது. • தன் குற்றம் மறப்பதும் பிறர் […]
- பொது அறிவு வினா விடைகள்1.பவுண்ட் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது?இங்கிலாந்து2.டாலர் நாணய முறை எந்தெந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது?அமெரிக்கா, மலேசியா3.யுவான் […]
- குறள் 214:ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்செத்தாருள் வைக்கப் படும்.பொருள் (மு.வ):ஒப்புரவை அறிந்து போற்றிப் பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன் […]
- இந்திய மக்களைப் பிரிக்கும் வேலையை ஒவைசி செய்கிறார்- பாஜக தலைவர்ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி நாட்டை இந்திய மக்களை பிரித்து அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். […]
- மனுஷனா இருந்ததுபோதும்… நாயாக மாறிய ஜப்பான் மனிதர்..ஜப்பானில் மனிதனாய் வாழ்வதை வெறுத்த நபர் ஒருவர் ஏகமாக செலவு செய்து நாய் உடை அணிந்து […]