• Sun. Sep 24th, 2023

பதக்கத்தை உறுதி செய்த பவினா பென் படேல்

பாராலிம்பிக் டேபிள் டென்னிஸில் இந்தியாவின் பவினா பென் படேல் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார்.
மாற்றுதிறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டித் தொடர், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கையுடன் நேற்று முன்தினம் கோலாகலமாகத் தொடங்கியது.

கோடைகால ஒலிம்பிக் போட்டியைத் தொடர்ந்து டோக்கியோவில் நடைபெறும் பாரா ஒலிம்பிக்சில், 162 நாடுகளை சேர்ந்த 4,400 வீரர், வீராங்கனைகள் 22 வகையான விளையாட்டுகளில் நடைபெறும் 539 பதக்க போட்டிகளில் பங்கேற்று திறமையை வெளிப்படுத்த உள்ளனர்.
டோக்கியோ பாராலிம்பிக் போட்டியின் 4-வது நாளான நேற்று, டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பவினா படேல் அமர்ந்த நிலையில், ஜாய்ஸ் டி ஒலிவியராவுடன் விளையாடினார். டேபிள் டென்னிஸ் காலிறுதிப் போட்டியில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். காலிறுதிப் போட்டியில் செர்பிய வீராங்கனையை 0-3 என்ற கேம் கணக்கில் வீழ்த்தினார் பவினா.

போட்டியின் 5-வது நாளான இன்று, இறுதிப்போட்டிக்கு இந்தியாவின் பவினா பென் படேல் முன்னேறினார். இறுதிப்போட்டிக்கு முன்னேறியதால் பவினா பென் படேலுக்கு வெள்ளி அல்லது தங்கம் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அரையிறுதியில் 3-2 என்ற செட் கணக்கில் சீன வீராங்கனை ஜாங்க் மியாவை பவினா பென் படேல் வீழ்த்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *