• Sun. Feb 9th, 2025

மனைவியிடம் கட்டாய உடல்லுறவு வன்கொடுமை ஆகாது. உயர் நீதி மன்றம் அதிரடி அறிவிப்பு !

By

Aug 27, 2021 , ,

சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவர் கட்டாயப்படுத்தி, தன் விருப்பத்திற்கு மாறாக பாலியல் உறவு கொள்வதாகவும் இயற்கைக்கு மாறாக செயல்படுவதாகவும் கணவர் குடும்பம் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாகவும் சத்தீஷ்கர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.கே.சந்திரவன்ஷி முன் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பின் நீதிபதி அளித்த தீர்ப்பில், சட்டப்படி திருமணம் செய்தபின், மனைவியின் விருப்பத்திற்கு மாறாக கணவர் கட்டாயமாக உறவு கொண்டாலும் அது பாலியல் வன்கொடுமை ஆகாது என்று தீர்ப்பளித்தார்.

அதனால், பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து கணவரை விடுவித்த நீதிபதி, வரதட்சணைக்காக பெண்ணின் உடலில் பொருட்களை செலுத்தி கொடுமைப் படுத்தியதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியிருக்கிறார். அந்த சட்டப்பிரிவில் பதியப்பட்ட வழக்கு செல்லுபடியாகும் என்று தெரிவித்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன் கேரள உயர் நீதிமன்றம், மனைவியின் விருப்பத்திற்கு மாறாக, பாலியல் உறவு கொள்ளும் கணவனிடம் இருந்து மனைவி விவாகரத்து கோரலாம் என தெரிவித்திருந்தது.