மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக பாஜகவை சேர்ந்த பிரமுகர்கள் எச் ராஜா போட்ட ட்வீட்டிற்கு பலரும் பதிலடி கொடுத்துள்ளனர்.
மதுரை எய்ம்ஸ் எங்கே என்ற ஒற்றைச் செங்களோடு சுற்றிக்கொண்டு இருந்தவர் எங்கே எனக் கேட்டு எச் ராஜா ஒரு டூவிட் போட்டுள்ளார். அதற்கு திமுகவினர் பதிலடி கொடுத்து வருகிறார்கள். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை போல மதுரையிலும் ஒன்றை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து சில வருடங்கள் ஆகிறது. பிரதமர் நரேந்திர மோடியை நேரில் மதுரை வந்து அடிக்கல் நாட்டியுள்ளார். ஆனால் மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் பூஜைக்கு வைத்த செங்கலை தவிர வேறு எந்தப் பணியும் நடைபெறவில்லை.
கட்டுமானம் நடக்காமலேயே இருக்கிறது. அரசு மருத்துவமனைக்கான இடத்தை தோப்பூரில் ஒதுக்கி மாநில அரசு உத்தரவிட்டிருக்கிறது. இடமும் கிடைத்து, அடிக்கல் நாட்டியும் கூட கட்டுமானப்பணிகள் சுத்தமாக நடக்கவே இல்லை. இதை வைத்துதான் கடந்த சட்டசபை தேர்தலில் மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் உதயநிதி ஸ்டாலின் அதிரடி பிரச்சாரம் மேற்கொண்டு உள்ளார். ஒற்றைச் செங்களை தூக்கி காட்டிக்கொண்டே இது என்ன தெரியுமா இதுதான் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நான் அதை தூக்கிக்கொண்டு வந்து விட்டேன் எனக் கூறி பாஜகவை செமையாக கலாய்த்து உள்ளார்.
இந்த பிரச்சாரம் தென் மாவட்டங்களில் மிகவும் பிரபலமானது. வேகமாக மக்களை கவர்ந்துள்ளது. கடைசியில் திமுகவுக்கு இந்த பிரச்சாரம் பெரும் வெற்றியையும் தேடிக் கொடுத்துள்ளது. இந்த நிலையில் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ஏய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகளுக்கான வகுப்புகள் நடைபெறும் என அறிவித்து வகுப்புகளும் தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் பாஜகவை சேர்ந்த பிரமுகர் எச்.ராஜா ஒரு ட்விட் போட்டுள்ளார். ராமநாதபுரம் வகுப்புகள் தொடர்பான புகைப்படங்களை வைத்து அவர் ட்வீட் வெளியிட்டுள்ளார். அதில் ஏய்ம்ஸ் எங்கு செங்களோட சுற்றிக்கொண்டிருந்த நபர் எங்கே என கேட்டுள்ளார். எய்ம்ஸ் என்றுச் செங்களோட சுற்றிக்கொண்டிருந்த என்ற இந்த வார்த்தை வந்திருக்கவேண்டும். அல்லது ஏய்ம்ஸ் என்று கூறி என வந்திருக்கவேண்டும்.
வார்த்தை தவறாக இருக்கிறது சரியாக என்ன சொல்ல வந்தார் என்பதை எச் ராஜா தான் விளக்க வேண்டும் என இந்த ட்விட்டிற்கு பதிலடி கொடுத்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில் பத்திரிக்கையாளர் சுமந்த் ராமன் அளித்துள்ள பதிலில் எய்ம்ஸ் மருத்துவமனை இன்னும் கட்டப்படவில்லை. தற்காலிகமாக இங்கு நடத்த வேண்டிய வகுப்புகளை வேறு ஒரு மருத்துவக் கல்லூரியில் நடத்துகின்றனர். என்றும் மதுரையில் செங்கல் தான் உள்ளது என கூறியிருக்கிறார். இன்னொருவர் இது ராமநாதபுரத்தில் நடக்கும் தற்காலிக வகுப்புகள் பொய் பேசுவதில் வல்லவன். தலைவன் தொடங்கி அடிமட்ட சங்கி வரை ஒரே மாதிரியாக இருக்கிறார்கள் என ஒருவர் விமர்சனம் செய்துள்ளார். அதேபோல இன்னொரு கருத்து செங்கல்பட்டு மதுரையில் தான் இருக்கு போய் எடுத்துக்கோங்க என பதிலடி கொடுத்துள்ளார். ஆக எதையோ போடப் போய் வேற மாதிரி ஆக தற்போது ட்விட்டரில் இவரை வறுத்து கொண்டிருக்கின்றனர்.