சென்னையில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தை செயல்படுத்த அமைக்கப்பட்ட ஆலோசனை குழு மறுசீரமைப்பு.
சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான ஆலோசனை குழுவை மறுசீரமைப்பு செய்து, அதற்கான உறுப்பினர்களை நியமனம் செய்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான வழிகாட்டுதல் குழு தலைவராக மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வழிகாட்டு குழுவின் துணை தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், சென்னை மேயர் பிரியா ராஜன், எம்எல்ஏ எழிலன், மாநகராட்சி துணை ஆணையர் பிரசாந்த் உள்பட 7 பேர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே, சென்னை மாநகராட்சியில் 6 ஆண்டுக்கு பின், மாநகராட்சி பட்ஜெட் மாமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. 2022 -23-ஆம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட் வரும் ஏப்ரல் 9ம் தேதி மாமன்றத்தில் காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது. சென்னை மேயர் பிரியா பதவியேற்று முதல் பட்ஜெட் என்பதால், மாநகராட்சி வளர்ச்சி, மக்களுக்கான புதிய அறிவிப்புகள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.