• Wed. Apr 15th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

சவுதி அரேபியாவில் உயிரிழந்த மகன் உடலை மீட்க கோரி பொற்றோர் மனு

சவுதி அரேபியாவில் தீ விபத்தில் உயிரிழந்த மகன் உடலை மீட்க நடவடிக்கை எடுக்க கோரி பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க மனு கொடுத்தனர்
சேலம் போடிநாயக்கன்பட்டி சிவதாபுரம் பகுதியை சேர்ந்த ராஜகோபால் மனைவி பத்மாவதி மற்றும் உறவினர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளிடம் மனு அளித்தனர் இதனை அடுத்து அவர்கள் கூறும்போது எனது மகன் சீதாராமன் வாசகி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது மூன்றரை வயதில் குழந்தை உள்ளது இந்த நிலையில் சவுதி அரேபியாவில் ரியாத் என்ற பகுதியில் பெட்ரோல் இன்ஜினியர் பணிக்காக கடந்த திங்கட்கிழமை சேலத்தில் இருந்து மும்பை வழியாக சவுதி அரேபியாவிற்கு சென்றார் அங்கு இரண்டு நாள் பணிபுரிந்து வந்த நிலையில் ரியாத் பகுதியில் நேர்ந்த திடீர் தீ விபத்தில் எனது மகன் உட்பட இந்தியாவை சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்துள்ளனர் அதில் எனது மகன் உட்படஇரண்டு பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்தார்.


மேலும் சவுதி அரேபியாவுக்கு சென்று ஒரு வாரத்திற்குள்ளே எனது மகன் தீ விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இது குறித்த தகவல் நேற்றுதான் தெரியவந்துள்ளது எனது மகன் உடல் எப்போ தமிழ்நாட்டுக்கு வரும் என்று தெரியவில்லை எனவே மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்து எனது மகனின் உடலை மீட்டு தர வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தனர்
வெளிநாட்டில் பணிக்குச் சென்று தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த மகனின் உடலை மீட்டு தர வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பெற்றோர் புகார் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு நிலவியது