சந்திரன், செவ்வாய் கிரகத்தில் பரமசிவன் கோவில் கட்டும் பணிகளை துவங்க இருப்பதாக நித்யானந்தா அறிவித்துள்ளார்.
நித்யானந்தா கவலைக்கிடம் என்பது போன்ற அவரது உடல் நிலை குறித்து கடந்த சில தினங்களுக்கு முன் செய்திகள் வரத்தொடங்கின . உடனே அவர், நான் சமாதி நிலையில் இருக்கிறேன், விரைவில் மீண்டும் சத்சங்க உரையாற்றுவேன் என தனது அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் தெரிவித்தார். இந்நிலையில் நேற்று அவர் தனது அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில்
பரமசிவமே இந்த உடம்பின் வழியாக வெளிப்பட்டு கொண்டிருக்கிறார், மேலும் மேலும் ஆழமாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். பல நிலைகளில் ஆன்மீக ரசவாத செயல்முறை நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நிகழ்ந்துகொண்டிருக்கும் இந்த ரசவாத செயல்முறையின் மூலம் குறை சக்தியுடைய உலோகங்கள் உயர் சக்தியுடைய உலோகங்களாக மாற்றப்படுகின்றன. சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தில் மனித குடியிருப்புகள் ஏற்படுத்தப்படும்போது அங்கு பரமசிவன் கோவிலையும் நிர்மாணிக்க கைலாசா நிர்வாகமானது முடிவுசெய்துள்ளது.
சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தில் மனிதக் குடியேற்றத்திற்காகப் பணிபுரியும் நிறுவனங்கள் மற்றும் நாடுகளுடன் இணைந்து வேலை செய்து கொண்டிருக்கிறது. என்றார்.