சென்னையில் உள்ள ஓபிஎஸ் வீட்டில் பலத்த போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்று நடத்த பொதுக்குழு விகாரத்தின் போது எற்பட்ட மோதல் காரணமாக பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. எனவே சென்னை ஆர்.ஏ.புரம் பசுமை வழி சாலையில் உள்ள ஓ.பன்னீர்செவ்வம் இல்லத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஒற்றைத்தலைமை விவகாரத்தில் நேற்று ஓபிஎஸ் – இபிஎஸ் தரப்பினரிடையே மிகபெரிய மோதல் ஏற்பட்டது. இதனால் ஓபிஎஸ் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவரின் ஆதரவாளர்கள் கூறியிருந்த நிலையில் போலீஸ்பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.