பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா மார்ச் 9-ல் கொடியேற்றதுதுடன் துவங்குகிறது.
சபரிமலையில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை பிரசித்தி பெற்றவை.இது தவிர ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களிலும், விஷு, ஓணம் பண்டிகை நாட்களிலும், பங்குனி உத்திர திருவிழா நாட்களிலும் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு, பல்வேறு பூஜை, வழிபாடுகள் நடைபெறும். எனவே இந்த நாட்களிலும் திரளான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
பங்குனி உத்திர ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5.30 மணிக்கு, நடையை மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி திறந்து வைப்பார்.
நாளை அதிகாலை 5 மணிக்கு நெய் அபிஷேகம் உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து கோவில் சன்னிதான முற்றத்தில் உள்ள தங்க கொடி மரத்தில் காலை 10.30முதல் 11.30க்குள் திருவிழா கொடியினை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைப்பார்.முன்னதாக கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஐயப்பனுக்கு நெய்யபிஷேகம் மற்றும் வழக்கமான பூஜைகளும் தினமும் நடைபெறும்.வரும் மார்ச் 17-ல் பள்ளிவேட்டை,மார்ச் 18-ல் பம்பை நதியில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா நடைபெறும்.இந்த நிலையில் பங்குனி மாத பூஜை வழிபாடு சபரிமலை கோவில் வரும் மார்ச்15-ந் தேதி முதல் துவங்கி தினமும் அதிகாலை 5 மணிக்கு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெறும் 5 நாள் நடைபெறும் பூஜைக்குப் பின் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 19-ந் தேதி இரவு அடைக்கப்படும். அன்று இரவு பூஜைக்குப்பின் அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். நாளை முதல் மார்ச் 19வரை தினமும் 15 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.