• Tue. Mar 21st, 2023

ஏப்.8ல் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனி திருவிழா

ByKalamegam Viswanathan

Feb 25, 2023

மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பங்குனி திருவிழா சுப்பிரமணிய சுவாமி தெய்வானை திருக்கல்யாணம் ஏப்ரல் எட்டாம் தேதி நடைபெறும். -கோயில் நிர்வாகம் அறிவிப்பு.
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பங்குனித் திருவிழா வருகிற மார்ச் 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
அதைத்தொடர்ந்து ஏப்ரல் 7ஆம் தேதி பட்டாபிஷேகம் ஏப்ரல் எட்டாம் தேதி திருக்கல்யாண வைபவம் நடைபெறும் என்றும், ஏப்ரல் ஒன்பதாம் தேதி காலை திருத்தேரோட்டம் நடைபெறும் எனவும் கோவில் நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *