• Sat. Jul 11th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

தாயின் கால்களை பிடித்து அழுத ஓபிஎஸ்!!

ByA.Tamilselvan

Feb 25, 2023

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் வயது மூப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த காலமானார்.
உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த பழனியம்மாள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. . அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது. இந்நிலையில் அவரது உடல்நிலை சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளிக்காததால் வீட்டிற்கு திரும்பி அனுப்பப்பட்டார். செயற்கை சுவாசம் பொருத்தப்பட்ட நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டுக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சென்ற சிறிது நேரத்தில் பழனியம்மாள் நாச்சியாரின் உயிர் பிரிந்தது. பெரியகுளத்தில் உள்ள வீட்டில் பழனியம்மாள் நாச்சியாரின் உடல் வைக்கப்பட்டுள்ளது. அங்கு சென்ற ஓ.பன்னீர் செல்வம் தனது தாயாரின் மறைவு தாங்காமல் அவரின் கால்களை பிடித்து கொண்டு கண்ணீர் விட்டு அழுதார். பழனியம்மாள் நாச்சியாரின் இறுதிச்சடங்கு பெரியகுளத்தில் உள்ள வீட்டில் இன்று நடைபெற உள்ளது.