பண்டோராஸ் பேப்பர்ஸ் இந்தியாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது பிரபலங்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
பண்டோராஸ் பேப்பர்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியர்கள் தொடர்பான விவரங்கள் வெளிநாடுகளிலிருந்து கோரி பெறப்படும் எனவும், அவர்களை வரித்துறை, அமலாக்கத்துறை, ரிசர்வ் வங்கி, நிதிசார் உளவுத்துறை என பலதுறையினரும் இணைந்த குழுவினர் விசாரணையை மேற்கொள்வார்கள் என்றும், மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
14 சட்ட ஆலோசனை மற்றும் நிதி சேவை நிறுவனங்களின் ஒரு கோடிக்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்கள் கசிந்து பல பிரபலங்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன. அரசு அனைத்து தகவல்களையும் கவனத்தில் கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு சட்டப்படியான நடவடிகை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.













; ?>)
; ?>)
; ?>)