• Sun. May 24th, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

மூர்த்திகள் தீர்த்தவாரியாடும் நிகழ்ச்சி..,

ByS. SRIDHAR

Feb 1, 2026

புதுக்கோட்டை நகர எல்லையில் உள்ள வெள்ளாற்றங்கரையில் தைபூசத்தை முன்னிட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

முருகப் பெருமான் ஆலயங்களிலும் சிவ தலங்களிலும் பக்தர்கள் விரதமிருந்து காவடி எடுத்தும், புதுக்கோட்டை பூசத்துறையில் ஆண்டு தோறும் தைப்பூச விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

புதுக்கோட்டை பூசத்துறையில் தைபூசத்தை முன்னிட்டு புதுக்கோட்டை வேதநாயகி உடனுறை சாந்தநாத சுவாமி, திருவேங்கைவாசல்பெரியநாயகி சமேதர வியாக்ரபுரிஸ்வரர், வெள்ளனூர் பிரகதம்பாள் உடனுறை அகத்தீஸ்வரர் திருக்கோகர்ணம் பிரகதம்பாள் சமேதரகோகர்ணேஸ்வரர், கோட்டூர் மீனாட்சியம்மன் சமேதர சுந்தரேஸ்வரர், திருமயம் வேணுவனேஸ்வரி உடனுறை சத்தியகிரிஸ்வரர், விராச்சிலை சவுந்தரநாயகி உடனுறை வில்வனேஸ்வரர் ஆகிய சிவஸ்தலங்களிள் இருந்து அம்பாள் சமேதர சிவபெருமாள் சப்பரங்கள் தேர்களில் பல கிலோமீட்டருக்கு வீதியுலா வந்து வெள்ளாற்றங்கரையில் இருபுறமும் எழுந்தருளி தீர்த்தவாரியாடி பக்தர்களுக்கு அருளாசி வழங்குவது ஆண்டு தோறும் நடைபெறும் பெரிய திருவிழா நிகழ்ச்சியாகும்.

இந்த ஆண்டும் தை மாதம் பௌர்ணமியை முன்னிட்டு பூச நட்சத்திர தினமான இன்று ஸப்த ஸ்தலங்களை சேர்ந்த மூர்த்திகள் தீர்த்தவாரியாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.