• Fri. Feb 13th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் 16–வது பொதுக்குழு..,

ByM.I.MOHAMMED FAROOK

Feb 1, 2026

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் காரைக்கால் மாவட்டத்தின் 16–வது பொதுக்குழு மாநில செயலாளர் முஃஸின் தலைமையில் மாநில பொருளாளர் காஞ்சி இப்ராஹிம் முன்னிலையில் நடைபெற்றது.

இதில், கடந்த ஒரு வருடத்தினுடைய TNTJ காரைக்கால் மாவட்டத்தினுடைய ஆண்டறிக்கையை மாவட்ட செயலாளர் இப்ராஹிம் தொகுத்து வழங்கினார்.

பின்னர், கடந்த ஒரு வருடத்தினுடைய வரவு & செலவு கணக்குகளை மாவட்ட பொருளாளர் ஒலி முஹம்மது மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்களுக்கு சமர்ப்பித்தார்.

அதைத்தொடர்ந்து மாவட்ட தலைவர் ஜாஹிர் அப்பாஸ் எதிர்கால செயல்திட்டமாக காரைக்கால் மாவட்டத்தில் தற்போது முக்கிய தேவையாக இருக்கக்கூடிய ventilator ஆம்புலன்ஸ் வாங்க இருப்பது குறித்தும், காரைக்காலில் அனைத்து சமூக மக்களுக்கு மத்தியிலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாக இறைவன் நாடினால் வருகிற மே மாதம் மாபெரும் ’இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்’ என்கிற சமூக நல்லிணக்க நிகழ்ச்சி நடத்துவது குறிக்கும் அறிவிப்பு செய்தார்.

மாநில பொருளாளர் காஞ்சி இப்ராஹிம் பத்திரிக்கையாளர் சந்திப்பில்
“புதுச்சேரி மாநிலத்தில் பல ஆண்டுகளாக ஆளும் அரசாங்கத்திற்கு வைக்கக்கூடிய கோரிக்கையான இஸ்லாமியர்களுக்கு வழங்கக்கூடிய 2 சதவீத இட ஒதுக்கீட்டை 6 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்,

காரைக்கால் மாவட்டத்தில் அரசு பொது மருத்துவமனையில் போதுமான அளவு மருத்துவ உபகரணங்கள் இல்லாமலும் போதிய மருத்துவர்கள் இல்லாமலும் அவசர உதவிக்கு கூட பெரும் சங்கடங்கள் ஏற்படுகிறது இதை உடனடியாக மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு அதற்கான தகுந்த ஏற்பாடு செய்யும்படி கேட்டுக் கொண்டார்.

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் சமூக நல்லிணக்கத்தை பேணக்கூடிய எந்த ஒரு மக்களும் மதவாத கட்சிக்கு ஓட்டு அளிக்க மாட்டார்கள் மதவாத கட்சிகளோடு கூட்டணியில் இருக்கக்கூடிய கட்சிக்கும் சேர்த்து இந்த தேர்தலில் தகுந்த பாடத்தை புகட்டுவார்கள் என்றும் அவர் தெரிவித்துக் கொண்டார்.

இப்பொதுக்குழுவில் பல்வேறு தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.