2018-ல் டெல்லியில் நிகழ்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் மரணத்தை அடிப்படையாகக் கொண்டு House of Secrets: The Burari Deaths’ எனும் இணைய ஆவணத் தொடரை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் லீனா யாதவ்.
11 பேர் மரணம் கொலையா, தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் ஒரு காரணமாக என்பதைக் கண்டுபிடிக்கும் புலனாய்வு வகை படமாக இது உருவாகியுள்ளது.
நெட்பிளிகிஸ் ஓடிடி தளத்தில் வருகிற 8-ம் தேதி இந்த தொடர் வெளியாகவுள்ள உள்ள நிலையில், உணர்வுப் பூர்வமான ஒரு உண்மைச் சம்பவத்தை அதன் உண்மைத் தன்மை பாதிக்காத வகையில் இயக்குநர் ஆவணமாக்கியிருப்பதாக ஏ.ஆர்.ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார். இத்தொடருக்கு இசையமைத்தது தனித்துவமான அனுபவம் எனவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.