• Sat. Apr 4th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

ஹீரோவாக களமிறங்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை மையமாகக் கொண்ட இந்த தொடரில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா, காவ்யா, குமரன், சரவணன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த சீரியலில் கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் குமரன். இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் குமரன் அடுத்ததாக புல்லட் புரபோசல் என்ற வெப்சீரிசில் நடிக்க உள்ளார். மேலும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடரில் நடித்து வரும் சைத்ரா ரெட்டி ஹீரோயினாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் ஹீரோவாக நடித்து பிரபலமான அமித்தும் அதில் முக்கிய ரோலில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.